பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி... பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்!!

By Narendran SFirst Published Jan 28, 2022, 10:14 PM IST
Highlights

பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். 

பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா பாதிப்பு கட்டுக்குள்வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதன்படி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 to 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 முதல் 2ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

click me!