
கோவை அருகே பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பணை செய்த தம்பதியினரை சைல்டு லைன் அமைப்பினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர் லாலி ரோட்டில், பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை விற்பணை செய்யப்பட உள்ளதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனே அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கையில் ஒரு ஆண் குழந்தையுடன் தம்பதியினர் வந்தனர்.
அந்த குழந்தையை அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரிடம் இந்த குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
அப்போது மறைந்திருந்த சைல்டுலைன் அமைப்பினர் அந்த தம்பதியினரை பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியலூரை சேர்ந்த ஆனந்தி மற்றும் ரவி என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் பெண் குழந்தை ஒன்றையும் விற்பணை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.