அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பியிடம் விசாரணை – விடாமல் இறுக்கும் ஐடி…!!!

Asianet News Tamil  
Published : Jul 21, 2017, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பியிடம் விசாரணை – விடாமல் இறுக்கும் ஐடி…!!!

சுருக்கம்

Health Minister V Vijayabaskars brother Uthayakumar has been investigating officials of the Income Tax Department

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இன்று நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த்து. 

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் உதயகுமார் உதவியாளரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

PREV
click me!

Recommended Stories

23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! எந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?
Tamil News Live today 25 January 2026: Karagattakaran - ராமராஜன் - ஷோபனா காம்போ மிஸ்ஸானது எப்படி? கனகாவுக்கு ஜாக்பாட் அடித்த கதை!