மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சென்னையை புரட்டி போட்ட வெள்ளம்
சென்னையை புரட்டிபோட்ட மிக்ஜாம் புயலால், சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பைகள் அனைத்து தெருக்களிலும் குவிந்து கிடந்தது. மேலும் வெள்ள பாதிப்பால் சென்னை நகரமாக குப்பை மேடாக காட்சியளித்தது. இதனையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி,
undefined
ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்
தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். கடினமான சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 37 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, பரிசு பொருட்களை சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்
திமுக அரசை கண்டித்து மதுரையில் திடீர் போராட்டம்.! அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி