தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நெரிசல்மிகு மாலை நேரமான நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மெட்ரோ இரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு புறப்பட தயாராகும் மக்கள்
தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ஏற்கனவே பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க கூட்டம் கூட்டமாக தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்து வருகின்றனர். மேலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்ல லட்சக்கணக்கான மக்கள் திட்டமிட்டு இதற்காக ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இற்காக நாளை மாலை முதல் சென்னை கோய்ம்பேடு,எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகளவு மக்கள் வருவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சார்பாக பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை). 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
3 நாட்களுக்கு மட்டுமே
போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
தீபாவளிக்கு ஆம்னி பேருந்தில் ஊருக்கு போறீங்களா! அப்படினா! கண்டிப்பாக இதை படியுங்கள்.!