தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு வருடங்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். தங்களது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்களை இழந்தனர். தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் காப்பதற்காக கொரோனா தடுப்பூசி கண்டறிப்பட்டது. இதனால் கொரோனாவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுபட்டனர். மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். பள்ளி மாணவர்களும் வழக்கம் போல் பள்ளிகளுக்கு சென்றனர். இந்தநிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் இருந்த நிலையில் திடீரென 1,134 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்றும் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
undefined
வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்
முன்னெச்சரிக்கை எடுங்கள்
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சராசரியாக நாள்தோறும் 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நாள்தோறும் சராசரியாக 966 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். உலக அளவிலான பாதிப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவு பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒரே நாளில் 86 பேருக்கு பாதிப்பு
இதனிடையே தமிழகத்தில் நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை மருத்துவமனை மற்றும் வீடுகளில் 517 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 49 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம்..? சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ திடீர் கோரிக்கை