யார்கிட்ட பணம் கேட்குற? - அப்போலோவை அசால்டாக மிரட்டிய பெண் காவல் உதவி ஆய்வாளர்...!

First Published Sep 22, 2017, 6:01 PM IST
Highlights
The cases were filed under 4 sections of the five including Lata Hemanathan.


சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயை எவ்வித பணமும் செலுத்தாமல் அழைத்து சென்றதோடு மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் காவல் உதவி ஆய்வாளர் லதா உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் லதா. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

250 நாட்களுக்கு பிறகு தமது தாயாருக்கு அப்போலோ நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்து விட்டதாகவும், தங்கள் அனுமதி இன்றி எங்கள் தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டதாகவும் லதாவின் சகோதரர் ஹேமநாதன் தெரிவித்துள்ளார். 
மேலும் அதற்கான வீடியோ ஆதரங்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் லதா தெரிவித்தார். 

இந்நிலையில்,  சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயை எவ்வித பணமும் செலுத்தாமல் அழைத்து சென்றதோடு மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் காவல் உதவி ஆய்வாளர் லதா உள்ளிட்ட 5 பேர் மீது அப்போலோ நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 

இதையடுத்து, லதா, ஹேமநாதன் உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

click me!