
பி.எஸ்.3 ரக வாகனங்களை பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பி.எஸ்.3 ரக வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதி விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தின. ஆனால் இதனை ஏற்காத நீதிமன்றம் ஏப்ரல் 1 ஆம் தேதியே இறுதிக் கெடு என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பி.எஸ்.3 தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விலையில் விற்றன. இருசக்கர வாகனத்தின் விலை 30 சதவீதம் குறைக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் வாகனங்களை வாங்கினர்.
இதற்கிடையே பி.எஸ்.3 ரக வாகனங்களை பதிவு செய்ய போக்குவரத்து துறையினர் மறுப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.