சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் வரி சீரமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் வரைவு நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்குதல் செய்வது குறித்தும் சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் , கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்வில்லை என்று தெரிகிறது. மதுரையில் இருந்து 3 அமைச்சர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்டது என்று தகவல் தெரிவிக்கின்றன.
undefined
இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நிதியாண்டிற்கான நிதி நிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு 13ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி பெறுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, மார்ச் 9 முதல் 12-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடக்க உள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்து, அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்க உள்ளார்.
மாவட்டஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும், மாவட்டங்கள்தோறும் திட்டசாதனை குறித்தும் தகவல் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டாக மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல், வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுதற்போது வரை செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.