மாட்டு வண்டியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் விவசாயி உயிரிழப்பு...

 
Published : Mar 29, 2018, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
மாட்டு வண்டியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் விவசாயி உயிரிழப்பு...

சுருக்கம்

The bullock wheels drove on farmer and he died

சிவகங்கை

சிவகங்கையில் மாட்டு வண்டியின் பின்பக்க சக்கரத்தில் ஏறியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் லிங்கராஜ் (35), விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள பெரியகோட்டை கள்ளர்குளம் கிராமத்திலிருந்து  குப்பை மண்ணை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு இடைக்காட்டூருக்கு வந்து கொண்டிருந்தார். 
 
அப்போது, மாட்டுவண்டியின் முன்பக்க பலகை உடைந்ததில் கீழே விழுந்த லிங்கராஜ் மீது வண்டியின் பின்பக்க சக்கரங்கள் ஏறியது. இதில், லிங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து மானாமதுரை சிப்காட் காவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு
எதிர்பாராத ட்விஸ்ட்.. மிகப்பெரிய சாதனை படைக்க போகும் தமிழ்நாடு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!