கோயில் யானை மீது மீண்டும் கொடூர தாக்குதல்..? யானையை திருப்பி கேட்ட அசாம் அரசு... தமிழகம் வந்த சிறப்பு குழு

By Ajmal Khan  |  First Published Sep 2, 2022, 6:11 PM IST

கோயிலில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெய்மால்யா  என்ற பெண் யானையின் உடல்நிலையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை தமிழகத்திற்கு அனுப்ப அசாம் அரசு முடிவு செய்துள்ளது.


யானையை தாக்கிய பாகன்கள்

யானைகள் பாகன்களோடு பாசமாக, அன்போடு பழக கூடிய விலங்காகும் அப்படிப்பட்ட யானையை பாகன்கள் கடுமையாக தாக்குவதாக கடந்த சில வருடங்களாக புகார் கூறப்பட்டு வருகிறது. அதற்க்கு உதாரணமாக  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம் பட்டியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது.  அப்போது  ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன்கள் இருவர் கடுமையாக தாக்கும் காட்சியும் வலி தாங்க முடியாமல் யானை அலறும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புத்துணர்வு முகாமில்  யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன் வினில்குமாரும், மற்றும் உதவி பாகனும் திருக்கோயில் நிர்வாகத்தால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து  அந்த இரண்டு பேரையும் போலீசார் கைதும் செய்தனர். 

Tap to resize

Latest Videos

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்யை நீக்கியது செல்லும்...! அரசியலில் இனி அவர் ஜீரோ...! - ஜெயக்குமார்

கோயிலில் மீண்டும் யானை மீது தாக்குதல்

இந்தநிலையில் அதே யானையை பாகன்களால்  மீண்டும் தாக்கப்பட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று சமூகவலை தளத்தில் பரவி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்  கோவிலில் கடந்த பத்தாண்டுகளாக சட்டவிரோத  வைக்கப்பட்டிருந்த அசாமை சேர்ந்த  ஜாய்மாலா என்ற கோவில் யானை தற்போது அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் உள்ளது. இந்த கோயில் கருவறை அருகில் உள்ள தரையில் சங்கிலியால் யானை பிணைக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள யானையின் காலில் பாகன்கள் கடுமையாக தாக்குவது போல் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த காட்சி  அசாம் மாநிலத்தில் உள்ள வன விலங்கு ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜெயமால்யதா யானை அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தை சேர்ந்த கிரின்மோரான் என்பவருக்கு சொந்தமான யானை என கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்கள் ஆய்வு செய்ததில், யானை காகபாதர் என்ற பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டது எனவும், 2008-ல் ஒப்பந்த அடிப்படையில் யானையை தமிழக அரசு வாங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. 

ஓபிஎஸ் அணிக்கு செல்கிறாரா செங்கோட்டையன்..? இபிஎஸ்ஐ சந்தித்த பிறகு திடீர் விளக்கம்

தமிழகம் வந்த அசாம் குழு

இந்தநிலையில் யானை திரும்ப வழங்குமாறு அசாம் அரசு, தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வனத்துறை உயர் அதிகாரிகளுடன்  ஜெய்மால்யா யானை தொடர்பாக நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கோயிலில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜோய்மாலா என்ற பெண் யானையின் உடல்நிலையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை இன்று  தமிழகத்திற்கு அனுப்ப அசாம் அரசு முடிவு செய்தது. இதனையடுத்து அசாம் மாநிலத்தை சேர்ந்த கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஹிர்தேஷ் மிஸ்ரா தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு இன்று இரவு வரவுள்ளனர். இந்த குழுவினர் யானையின் உடல் நிலையை கண்காணித்து அசாம் அரசுக்கு அறிக்கை அளிக்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஸ்ரீமதி மரணத்தில் ஏராளமான மர்ம முடிச்சுக்கள்.! விசாரணை குற்றவாளிகளுக்கு நிரபராதிகள் என நற்சான்றா?- முத்தரசன்
 

click me!