கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது;

First Published Oct 4, 2017, 8:26 AM IST
Highlights
The arrest of the villagers who did not work with the wrong words of the village administration officer


தூத்துக்குடி

கயத்தாறில் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைக்குளத்தில் அனுமதியின்றி முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டதால் அதற்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

இந்த நிலையில் முத்துராமலிங்கத் தேவர் சிலையைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி துரைமுருகன் (27) என்பவர் சிலை இருந்த அறையின் பூட்டை உடைக்க முயன்றார்.

அதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி, பூட்டை உடைக்கக் கூடாது என்று கூறி தடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

மேலும், கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார் துரைமுருகன்.

இந்த நிலையில் சிலையைத் திறக்க வலியுறுத்தி துரைமுருகன் அனுமதியின்றி நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு காவல் நிலைய காவலாளர்கள் துரைமுருகனை கைது செய்தனர்.

click me!