
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியராக விருதுநகரைச் சேர்ந்த பா.பொன்னையா பதவியேற்று உள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உதவி ஆட்சியராக பணிபுரிந்த பா.பொன்னையா காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.
இவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தகப்பனார் பெயர் பால்சாமி, தாயார் மறைந்த ராஜம்மாள். இவருடைய மனைவி பெயர் சினேகலதா. இவர்களுக்கு சௌதாமினி என்ற மகளும் ராகுல் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.
1994–ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வு மூலம் கோட்ட வளர்ச்சி அலுவலராக ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றிய பா.பொன்னையா, தமிழ்நாடு முழுவதிலும் அந்தத் துறையில் பல மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார்.
கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இப்போது, காஞ்சிபுரத்தின் ஆட்சியராக பதவெயேற்றுள்ளார்.