
விருதுநகர்
அதிமுக-வில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கட்சியை அழித்துவிடுவார்கள் என்று காங்கிரசு கட்சி மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடந்த கூட்டத்தை முடித்துவிட்டு மதுரை நோக்கி வந்த காங்கிரசு மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு விருதுநகர் மாவட்ட்டம், திருவில்லிபுத்தூரில் அக்கட்சி நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கு, காங்கிரசு கட்சி நகரத் தலைவர் வன்னியராஜ் தலைமையிலான கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்தார்.
அதில், “நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.
அதிமுக-வில் அவரது கட்சியினரே குழப்பம் ஏற்படுத்தி, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கட்சியை அழித்துவிடுவார்கள்” என்று அவர் தெரிவித்துவிட்டு அவர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பேட்டியின்போது காங்கிரஸ் வர்த்தக தலைவர் பெரியசாமி மற்றும் காங்கிரசு நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர்.