
நாகபட்டினம் மாவட்டம் பொறையாறில் 9 தொழிலாளர் உயிரைக் குடித்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
பணிமனை ஊழியர் ஓய்வு அறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை இடிந்து விழுந்ததில் பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர், நடத்துனர்கள் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடத்துனர் வெங்கடேசன் உயிரிழந்தார்.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சரை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இறவர்களுக்கு இழப்பீடு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதனையடுத்து இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த பணிமனை கட்டிடத்தின் எஞ்சிய சுவர்களும் இன்று இடிக்கப்பட்டுள்ளது.