முடிந்தது புரட்டாசி; எகிறியது சிக்கன், மட்டன் “ரேட்” விலை உயர்வுக்கு போலீசார் காரணமா?

 
Published : Oct 22, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
முடிந்தது புரட்டாசி; எகிறியது சிக்கன், மட்டன் “ரேட்”  விலை உயர்வுக்கு போலீசார் காரணமா?

சுருக்கம்

chicken mutton rate is very high

புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, விரதம் இருந்த மக்கள் மீண்டும் அசைவத்தை நாடத் தொடங்கிவிட்டதால், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை எகிறத் தொடங்கிவிட்டது.

சென்னையில் மட்டன்,சிக்கனுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டு இருப்பதால், விலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆட்டிறைச்சி ஒரு கிலோ ரூ. 550 ஆகவும், தனிக்கறி ரூ.650 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல கோழி இறைச்சி கிலோ ரூ.180 ஆகவும், தோல்நீக்கப்பட்ட இறைச்சி கிலோ ரூ.200ஆகவும் விற்பனையானது.

அடுத்துவரும் நாட்களில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையைப் பொருத்தவரை, மக்களின் தேவையை நிறைவு செய்ய வியாபாரிகள் ஆந்திரா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஈரோடு,சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள், கோழிகள் கொண்டுவரப்படுகின்றன. 

ஆனால், கடந்த கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் இறைச்சி உற்பத்திக்கூடமாக விளங்கும் ஈரோடு, நாமக்கல்,சேலம் மாவட்டங்களில் வரத்து குறைந்ததால், வியாபாரிகள் ஆந்திரா மாநிலத்தை நாடியுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு மஹாராஷ்டிரா, கர்நாடாக மாநிலங்களில் இருந்து ஆடுகள், கோழிகள்கொண்டுவரப் பட்டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க போதுமான சப்ளை தமிழகத்தில் இல்லை என்பதால் வியாபாரிகள் இப்போது மற்ற மாநிலங்களில் இருந்து ஆடுகள், கோழிகளை கொண்டுவரத் தொடங்கியுள்ளனர்.

போலீசாருக்கு அதிகமான லஞ்சம்…

இது குறித்து நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இறைச்சி விற்பனையாளர் சயத் அபுபக்கர் கூறுகையில், “சோதனைச் சாவடிகளில் இருக்கும் போலீசார் எங்களிடம் கட்டாயமாக பணத்தை வசூலிப்பதால்தான் நாங்கள் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி  விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து புளியந்தோப்புவரை 10 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. 

குறைந்தபட்சம் ரூ.500 வரை ஒவ்வொரு சோதனைச் சாவடிக்கும் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த பணத்தை நாங்கள் எப்படி எடுப்பது. இறைச்சி விலையை உயர்த்தி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கிறோம். எங்களுக்கு வேறு வழிதெரியாமல் தான் விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதேசமயம், போக்குவரத்து செலவும் அதிகரித்துவிட்டது. இதற்கிடையே ஜி.எஸ்.டி. வரி வந்துவிட்டதால், அனைத்து வரிகளும் இறுதியாக வாடிக்கையாளர்கள் மீதே சுமத்தப்படுகிறது” என்றார்.

சென்னை நகரில் மட்டும் 1500 இறைச்சி விற்பனைக் கடைகள் உள்ளன. இதில் நாள்ஒன்றுக்கு 1500 ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன, அதேபோல, கோழி இறைச்சியைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 15லட்சம் கிலோ கோழி இறைச்சி சென்னை நகருக்கு தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்து.

இறைச்சி விலை உயர்ந்ததைப் போல , சைவப்பிரியவர்களுக்கான காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் விளைச்சல் குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக காய்கறிகள் விலையும் உயர்ந்து வருகிறது.

ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, காய்கறிகள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், ஓட்டல் உரிமையாளர்கள் உணவு வகைகளின் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இது குறித்து கீழ்பாக்கத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர் கந்தராஜ் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தியதில் இருந்தே ஓட்டலுக்கு வாடிக்கையாளற்கள் வருகை குறைந்துவிட்டது. இப்போது காய்கறிகள், இறைச்சி விலை உயர்வும் சேர்ந்துவிட்டது. எங்களுக்கு இந்த விலையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு