தமிழகத்தில் பதற்றம்... பெரியார் சிலையில் செருப்பு வைத்து அவமரியாதை!

By vinoth kumar  |  First Published Sep 17, 2018, 1:58 PM IST

திருப்பூர் அருகே தாராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலைமீது செருப்புகளை வைத்து அவமரியாதை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் அருகே தாராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலைமீது செருப்புகளை வைத்து அவமரியாதை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை தீவுத்திடல் பூங்காவில்  தந்தை பெரியாரின் 6 அடி உயர வெண்கலச்சிலை அமைந்துள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அப்போதைய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பெரியார் சிலையை திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், மர்மநபர்கள் சிலர், தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது ஒரு ஜோடி செருப்பு வைத்து அவமரியாதை செய்துள்ளனர். மேலும், கல்லால் தாக்கி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

தகவலறிந்து அப்பகுதியில் திமுக  மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டனர். தீவுத்திடல் பெரியார் சிலை முன் குவிந்த அவர்கள், திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

click me!