தைப்பூசம்.. திருச்செந்தூர் போறீங்களா? சென்னை டூ நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்!

Published : Jan 29, 2026, 09:52 PM IST
தைப்பூசம்.. திருச்செந்தூர் போறீங்களா? சென்னை டூ நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்!

சுருக்கம்

தைப்பூசத்தையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா களைகட்ட உள்ளது. தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூரில் பல லட்சக்கணக்கான முருக பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பக்தர்கள் திருச்செந்தூர் செல்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தாம்பரம் டூ தூத்துக்குடி

அதாவது தாம்பரத்தில் இருந்து ஜனவரி 31 (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:06003) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து பிபரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்: 06004) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கடை வந்தடையும்.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகள், 4 முன்பதிவில்லாத பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைப்பட்டு இருக்கும்.

சென்னை எழும்பூர் டூ நெல்லை

இதேபோல் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (வ.எண்: 06001) ஜனவரி 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (வ.எண்: 06002) நெல்லையில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 18 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித் தொகை.. எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?