நாளை முதல் கடையடைப்பு போராட்டம் – ஜவுளி வியாபாரிகள் அறிவிப்பு…

First Published Jul 5, 2017, 7:23 PM IST
Highlights
Textile Merchants Struggle at tomorrow in tamilnadu


ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி, நாளை முதல் 11ஆம் தேதி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது.

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜிஎஸ்டி வரியின் சதவிகிதத்தை குறைக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதில், பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், பாலிஸ்டர் நூலுக்கு 18 சதவீதமும் உற்பத்தி செய்த ஜவுளிப் பொருட்களுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜவுளித்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நாளை முதல் 11ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் நாளொன்றுக்கு 30 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

click me!