ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கு வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கு வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறித்துள்ளது.
மேலும் படிக்க:உஷார் மக்களே!! இன்று கனமழை.. எந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப்போகும் மழை..
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது . இந்நிலையில் இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.500 விண்ணப்பத்தாரர்களிடமிருந்து பெறப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், மாற்றுதிறனாளிகள்,பழங்குடியினருக்கு ரூ.250 கட்டணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏபரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவதற்கு நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!
இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முறை எழுத்து தேர்வாக இல்லாமல் கணினி வழி முறையில் தேர்வை நடத்தவும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:பயணிகளே கவனத்திற்கு !! சென்னை டூ தாம்பரம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து மின்சார இரயில்களும் ரத்து..
தாள் 1 மற்றும் தாள் 2க்கு வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறித்துள்ளது. இதனிடையே 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.