10ஆம் வகுப்பு பையனை தூக்கிய 35 வயசு ஆண்டி… செல்போன் சிக்னலை வைத்து தேடும் போலீஸ்!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 5:36 PM IST
Highlights

திருவாரூரில் 35 வயது பெண்ணுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் 35 வயது பெண்ணுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் சிலர் தங்களை விட மூத்த பெண்கள் மீது காதல் கொள்வதுடன் அவர்களை திருமணமும் செய்துக்கொள்கிறார்கள். அதேபோல் வயது குறைந்த பெண்களும் தங்களை விட பல வயது மூத்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கர்நாடக மாநிலம், தும்குரு மாவட்டம், சந்தேமவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மேகனா என்ற 25 வயது பெண் 65 வயதான சங்கரண்ணாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.  இதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திருமணமான 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியருடன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு - ராசாத்தி தம்பதியர். இவர்களுக்கு பரத் என்கிற மகனும், சாரதி, பாரதி என்ற மகள்களும் உள்ளனர். அதே தெருவில் கட்டிட வேலை செய்கின்ற பாலகிருஷ்ணன் - லலிதா என்கிற தம்பதியினரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கும் 13 வயதில் மகள் உள்ளார். லலிதா தேதியூரிலிருக்கும் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  அதற்கு அருகே உள்ள எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பாலகுரு - ராசாத்தி தம்பதியரின் மகன் பரத். இந்த நிலையில் பரத்துக்கும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதுக்குறித்து பரத்தின் வீட்டிற்கு தெரிய வர பரத்தின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதுமட்டுமின்றி பரத்தை  எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர்.  சித்தி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்த பரத் லலிதாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார். இந்நிலையில்,  கடந்த 26ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்ற பரத் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும்  அவரை காணவில்லை. அதே சமையத்தில் லலிதாவும் காணவில்லை என்ற தகவல் பரத்தின் பெற்றோர்களுக்கு கிடைக்கவே அப்போது தான் அவர்களுக்கு விஷயம் புரிகிறது. இதையடுத்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத் காணவில்லை என்று அவரது தந்தை பாலகுரு புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறை நடத்திய விசாரணையில் கிருத்துவ மேரி என்பவர் பரத் - லலிதா இருவரையும் பரத் படித்துவந்த பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதாக தெரிய வந்தது. அதை அடுத்து ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தனபால்,  இருவரையும் பூந்தோட்டம் ஊரில் இறக்கி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் லிதா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லலிதாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்து வருகிறார்கள். 35 வயது பெண்ணுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!