
தென்காசி காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி அருகே பிரானூர் பார்டரில் வசித்து வருபவர் நவீன் பட்டேல். இவரது மகள் கிருத்திகா பட்டேல். இவரும் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மகன் வினித் என்பவரும் காதலித்து வந்த நிலையில் டிசம்பர் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் கடந்த 25ம் தேதி அன்று அவரது பெற்றோர்களால் கடத்தப்பட்டார்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே காதல் மனைவி கடத்தப்பட்டது குறித்து காதல் கணவர் வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், இந்த நிலையில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அதன் பின்னர் கிருத்திகா தொடர்ந்து தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், பணம் கேட்டு காதல் கணவர் வீட்டில் மிரட்டுவதாகவும் பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பெயரில் அந்த பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் அடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
அப்போது, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 மாதமாக தலைமறைவாக இருந்த நவீன் பட்டேல் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருவனந்தபுரம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!