புரட்சித் தலைவி அம்மா ஆலயம்…ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய பக்தர்…

First Published Dec 14, 2016, 2:59 PM IST
Highlights


புரட்சித் தலைவி அம்மா ஆலயம்…ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய பக்தர்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் ஜெயலலிதாவுக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்தனர். அவர் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்கள் ஒவ்வொன்றும் வெகுவாக பாராட்டி பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மறைவு கழக தொண்டர்களை மிகவும் பாதித்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில் அவரது படங்களை வைத்து பூஜை செய்து வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக தஞ்சையில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளார். தஞ்சை மேலரத வீதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைந்தபோது அவருக்கு சிலை ஒன்றை வைத்தார்.

தற்போது அந்த சிலை அருகே 130 சதுர அடி பரப்பளவில்  ஜெயலலிதாவுக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என பெயரிட்டுள்ளார்.அதில்  மக்களால்  நான்  மக்களுக்காக நான் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த கோவிலில் ஒன்றரை அடி உயரமுள்ள மார்பளவு ஜெவின் சிலையும் வைக்கப்படவுள்ளது. இச்சிலை விரைவில் திறப்பப்படவுள்ளதாக சுவாமிநாதன் தெரிவித்தார்.தற்போது இந்த கோவில் கருவறையில் ஜெவின் புகைப்பபடம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது வெண்கலச் சிலை தாயாரானதும் அச்சிலை புரட்சித் தலைவி அம்மா கோவிலில் வைக்கப்படும்.

 

click me!