
பள்ளிகளில் கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரி முருகானந்தம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தற்போதைய கல்வி முறையால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகவும் இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு பள்ளி நடத்தகூடாது எனவும் மாற்றுத்திறனாளிகளை அனைவருடன் சேர்ந்து கல்வி கற்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துதேர்வை குறைத்து செயல்முறை கல்வியை அதிகபடுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் முருகானந்தம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை 6 வாரத்திற்கு ஒத்திவைத்து ஆணை பிறப்பித்துள்ளது.