TET Exam 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி தீடீர் மாற்றம்! காரணம் என்ன?

Published : Aug 14, 2025, 08:29 PM IST
Teachers Recruitment Board

சுருக்கம்

2025-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேதிகள் நவம்பர் 15 மற்றும் 16 ஆக மாற்றப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.

2025-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test - TET) தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களுக்காக, இந்தத் தேர்வுகள் நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB), இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் 11, 2025 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.trb.tn.gov.in) வெளியிட்டது.

தேர்வுத் தேதி மாற்றம்

முன்னதாக, இந்தத் தேர்வுகள் நவம்பர் 1, 2025 மற்றும் நவம்பர் 2, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தாள்-I தேர்வு நவம்பர் 15, 2025 அன்றும், தாள்-II தேர்வு நவம்பர் 16, 2025 அன்றும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!