Hijab Issue: பரபரப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கர்நாடகா.. ஆசிரியர்களும் ஹிஜாப் அணிய தடை..

Published : Apr 04, 2022, 09:31 PM ISTUpdated : Apr 04, 2022, 09:32 PM IST
Hijab Issue: பரபரப்பு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கர்நாடகா.. ஆசிரியர்களும் ஹிஜாப் அணிய தடை..

சுருக்கம்

கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், தேர்வுப் பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், தேர்வுப் பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் முஸ்லீம் மாணவிகள் வகுப்புக்குள் ஹிஜாப் அணிந்து வருதற்கு அரசு தடை விதித்தது. மேலும்  ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்த்து தெரிவித்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அரசின் முடிவுக்கு எதிராக ஹிஜாப் அனுமதி வழங்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இதனை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேலும் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க இருப்பதால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மனுதாரர்களின் இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தேர்வுக்கும் ஹிஜாப் அணிவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.கர்நாடகாவில் தற்போது எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இந்த மாத இறுதியில் ப்ரீ யுனிவர்சிட்டி தேர்வுகள் தொடங்குகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும், எஸ்எஸ்எல்சி மற்றும் ப்ரீ யுனிவர்சிட்டி தேர்வு பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக  அரசு எஸ்எஸ்எல்சி மற்றும் ப்ரீ யுனிவர்சிட்டி தேர்வு பணிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் ஆசிரியர்களை தேர்வுப் பணிக்கு அனுமதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இதுக்குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், , "தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை என்பதால், தார்மிக அடிப்படையில், ஹிஜாப் அணிந்து தேர்வுப் பணிக்கு வரும் ஆசிரியர்களை பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.கடந்த வாரம், கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியை ஒருவர் ஹிஜாப் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியதால், அவர் தேர்வு கூடத்திற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Loan Scheme:12th தகுதியே போதும்.! தொழில் தொடங்க அடமானம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் கிடைக்கும்..! இளைஞர்களுக்கு செம வாய்ப்பு!
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?