
வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் விநியோகிக்கப்படும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 முறையே வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
கரூர் மாவட்டத்தில், கரூரில் நகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளி, நகராட்சி கோட்டமேடு, சி.எஸ்.ஐ. மகளிர் பள்ளி, மார்னிங் ஸ்டார், மாயனூர் அரசுப் பள்ளி, திம்மாச்சிபுரம், அரவக்குறிச்சி அரசு மகளிர் பள்ளி, இராச்சாண்டார் திருமலை அரசு மகளிர் பள்ளி, நாகனூர் அரசுப் பள்ளி, தரகம்பட்டி அரசு மாதிரிப் பள்ளி, ஜெகதாபி அரசுப் பள்ளி ஆகிய பள்ளிகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
இந்த விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் 22 வரை நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விற்கப்படும், மேலும், விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என்றும் ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரு தேர்வுகளை எழுத விரும்புவோர் தனித்தனி விண்ணப்பங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்” எனத் செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.