கள்ள காதலில் ஈடுபட்ட தாய் எனக்கு தேவையில்லை... முகநூல் காதலால் பலியான ஆசிரியை உடலை வாங்க மறுத்த மகன்...

 
Published : May 09, 2017, 05:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
கள்ள காதலில் ஈடுபட்ட தாய் எனக்கு தேவையில்லை...  முகநூல் காதலால் பலியான ஆசிரியை உடலை வாங்க மறுத்த மகன்...

சுருக்கம்

teacher murdered in anna nagar

பலருடன் தொடர்பு வைத்திருக்கும் தாய் எங்களுக்கு தேவை இல்லை என பள்ளி ஆசிரியையான நிவேதாவின் உடலை பிள்ளைகள் வாங்க மறுத்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர் நிவேதா. இவருக்கு 47 வயதாகிறது. மேலும் ஒரு பையன் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இருவரும் சாப்டவேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகின்றனர்.

இதனிடையே நிவேதா 20 வருடங்களுக்கு முன்பே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

பிறகு 20 வருடங்களாக தனிமையில் இருந்ததால் வாழ்க்கை துணை வேண்டி புதிய உறவை ஏற்படுத்திக்கொள்ள தனது பக்கத்து குடியிருப்பில் உள்ள இளையராஜா மீது காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும் முகநூலில் ஏராளமான ஆண்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முகநூல் மூலம் கணபதி என்பவருக்கும், நிவேதாவுக்கும் ஏற்கனவே நட்பு இருந்திருக்கிறது. கணபதிக்கு பண உதவி செய்யும் அளவுக்கு, நிவேதாவின் நட்பு வளர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒரு வருடத்துக்கு முன்பு நிவேதாவின் மகளுக்கு சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள இன்போசிஸில் வேலை கிடைத்ததால் சிங்க பெருமாள் கோவிலில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவரது மகனும் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதால் அவரும் தனியாக வசித்து வருகிறாராம். அதே போல தனது தாயின் தவறான நடவடிக்கை பிடிக்காமல் போனதும் விற்கள் பிரிவுக்கு காரணமாம்.

இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, பேஃஸ்புக் மூலம் சென்னை கொளத்தூர் வஜ்ரவேல் நகரை சேர்ந்த இன்ஜினியர் கணபதி (33) என்பவர் நிவேதாவுக்கு அறிமுகமானார். திருமணமான கணபதி, தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வங்கியில் லோன் பெற்று தருவதாக நிவேதாவிடம் சொல்லியுள்ளார். இதனால் இருவரின் நட்பு அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நிவேதாவும், இளையராஜாவும்  கோவையில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். வழியில் மறைமலைநகரில் மகளை பார்த்துவிட்டு, அண்ணாநகருக்கு புறப்பட்டனர். ஆவடி சாலை வேலங்காடு சுடுகாடு அருகே வந்தபோது, ‘கணபதி எனக்கு படம் தரவேண்டும் அதே போல எனது புகைப்படம் அவனிடம் உள்ளது. அதை வாங்க வேண்டும், அதனால் அவனை இங்கு வர சொல்லி இருக்கிறேன்’ என்று இளையராஜாவிடம் நிவேதா கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து கணபதிக்கு நிவேதா போனில் பேசி, கணபதியை வரவழைத்துள்ளார். கணபதியும், நிவேதாவும் சற்று தொலைவில் நின்று பேசி கொண்டிருந்தனர். இதை காரில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த இளையராஜா ஆத்திரம் அடைந்துள்ளார். திடீரென நிவேதாவுக்கும், கணபதிக்கும் சண்டை முற்றியுள்ளது. பின்னர் இருவரும் சமாதானமாக சென்றுவிட்டனர். 

இதை பார்த்த இளையராஜாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டதால் காரை வேகமாக ஓட்டி இருவர் மீதும் மோதியுள்ளார். இதில் நிவேதாவின் கால் முறிந்தது. கணபதி தப்பினார். பின்னர் நிவேதாவை தனது காரில் ஏற்றிக்கொண்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவர்களுடன் கணபதியும் சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில் நிவேதா இறந்துவிட்டது தெரிந்தது. 

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நிவேதாவின் பிள்ளைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விஷயத்தை கேள்விப்பட்டு வந்த அவரது பிள்ளைகள் இப்படிப்பட்ட ஒரு தாய் தங்களுக்கு தேவையில்லை என நிராகரித்துள்ளனர். மகனும், மகளும் தாயின் உடலை  வாங்காமல் நிராகரித்ததால் போலீசார் தலையை  பிய்த்து கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!