ரூ. 1 கோடியே 86 இலட்சத்துக்கு விற்கப்பட்ட தேயிலைத் தூள்; விற்பனை ஏற்றம் கண்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

 
Published : Jan 10, 2018, 09:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ரூ. 1 கோடியே 86 இலட்சத்துக்கு விற்கப்பட்ட தேயிலைத் தூள்; விற்பனை ஏற்றம் கண்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

சுருக்கம்

Tea powder sold for 1 coroe 86 lakhs Farmers are happy

நீலகிரி

நீலகிரியில் நடைப்பெற்ற தேயிலைத் தூள் ஏலத்தில் ரூ. 1 கோடியே 86 இலட்சத்து 30 ஆயிரத்து 63-க்கு  தேயிலைத் தூள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் டீசர்வ் ஏல மையத்தில் தேயிலைத் தூள் ஏலம் நடைபெற்றது.

இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 803 கிலோ தேயிலைத் தூள் ஏலத்துக்கு வந்தது.

இதில், இலை இரகம் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 389 கிலோ, டஸ்ட் ரகம் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 414 கிலோ அடங்கும். இது கடந்த வாரத்தைவிட 55 ஆயிரத்து 801 கிலோ குறைவாகும்.

1 இலட்சத்து 44 ஆயிரத்து 989 கிலோ இலை இரகம், 98 ஆயிரத்து 364 கிலோ டஸ்ட் இரகம் என மொத்தம் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 353 கிலோ தேயிலைத் தூள் விற்பனையானது.

மொத்தம் 82.27 சதவீதம் விற்பனையான இதில், சராசரி விலையாக 67.26 ரூபாய் கிடைத்தது. இந்த முறை 2 ரூபாய் விலையேற்றம் அடைந்துள்ளது. 1 கோடியே 86 இலட்சத்து 30 ஆயிரத்து 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் ரூ. 22 இலட்சத்துக்கான விற்பனை குறைந்தது. எனினும், முந்தைய ஏலங்களைவிட விற்பனை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!