சென்னை ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரெய்டு … 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ….

 
Published : Jan 10, 2018, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
சென்னை ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரெய்டு … 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ….

சுருக்கம்

Income tax raid in Joy Alukkas jeweller shop chennai

சென்னை தியாகராயநகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் உள்ள ஜாஸ் ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உலுகம் முழுவதும் செயல்பட்ட வருகிறது, குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இந்நிறுவனத்துக்கு ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. சென்னை தியாகராயநகரில் உள்ள பிரசாந்த் டவரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரிஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து தி.நகர் ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை, அதன் உரிமையாளர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மட்டுமல்லாமல் , கேரளா உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!