என்னையே வேணாம்னு சொல்றியா! டீயில் எலி பேஸ்ட்! உயிருக்குப் போராடும் காதலன்! கைதான காதலி பகீர்!

Published : Mar 04, 2025, 09:22 AM IST
என்னையே வேணாம்னு சொல்றியா! டீயில் எலி பேஸ்ட்! உயிருக்குப் போராடும் காதலன்! கைதான காதலி பகீர்!

சுருக்கம்

விழுப்புரத்தில் காதலியை கைவிட்டதால் தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி. காதலன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், சிறுநீரகம் செயலிழந்தது. ரம்யா கைது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ளது கிரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ஜெயசூர்யா (24). சட்டக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ரம்யா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளனர். அந்த பெண் தங்கை முறை என்பதால் அவளுடன் பேசுவதை நிறுத்தித் கொள்ள வேண்டும் என  ஜெயசூர்யாவை கண்டித்துள்ளனர். 

இதனால் ஜெயசூர்யா காதலி ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியது மட்டுமல்லாமல் காதலை கைவிட முடிவு செய்தார். பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் இருந்து வந்த ரம்யா எப்படியோ நைசமாக பேசி பிப்ரவரி 2ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது ஜெயசூர்யாவிற்கு ரம்யா தேநீர் கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.அதன் பின்னர் மறுநாள் உடல் நிலையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?' என்று ரம்யா வாட்ஸ் ஆப் மூலமாக காதலன் ஜெயசூர்யாவிடம் கேட்டுள்ளார். 

அதற்கு ஜெயசூர்யா ஆமாம் என்று கூறியதற்கு என்னை நீ வேண்டாம் என்று கூறி விட்டதால் தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெயசூர்யா அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக நண்பர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜெயசூர்யாவை அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் ஜெயசூர்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. /

இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவானதை அடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரம்யாவை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவெண்ணைநல்லூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்