டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1.13 லட்சம் அபேஸ்

Asianet News Tamil  
Published : Dec 04, 2016, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1.13 லட்சம் அபேஸ்

சுருக்கம்

மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்ததும் விற்பனையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை, வழக்கம்போல் கடையை திறக்க வந்தனர்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து பீர்க்கன்காரனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, வழக்கமாக விற்பனையாளர் கல்லாப்பெட்டியை கடையின் உள்ளே புதைத்து வைத்துவிட்டு செல்வார். ஆனால், சம்பவத்தன்று, இரவு கல்லாப்பெட்டியை புதைக்காமல் வெளியே வைத்துச்சென்றது தெரியவந்தது.

PREV
click me!

Recommended Stories

கருணாநிதி, ஸ்டாலின் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியம் இருக்கிறதா? திருமாவுக்கு டிடிவி கேள்வி
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?