கண்ணாடி விரியனை பிடித்து சாகசம் – போதையில் பாம்பை பிடித்து விளையாடியவர் பலி

First Published Dec 4, 2016, 11:57 AM IST
Highlights


போதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து விளையாடியவர், அதே பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.

தேனி அல்லிநகரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (எ) அப்பாஸ் (42). கறிக்கடை தொழிலாளி. நேற்று மாலை இஸ்மாயில், தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது அருந்தி கொண்டிருந்தபோது, திடீரென 3அடி கண்ணாடி விரியன் பாம்பு அங்கு ஊர்ந்து சென்றது.

இதை பார்த்த்தும், அங்கிருந்த குடிமகன்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே போதையில் இருந்த இஸ்மாயில், ஓரமாக ஊர்ந்து சென்ற பாம்பை அப்படியே கையில் பிடித்தார். பின்னர், அதை எடுத்து கொண்டு வெளியே வந்த அவர், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரோட்டில் நின்று, விளையாட்டு காட்ட தொடங்கினார். 

அப்போது, அவரது பிடியில் இருந்து நழுவிய பாம்பு, கையில் கடித்தது. இதில் அவரது கையில் ரத்தம் சொட்டியது. ஆனாலும் அவர் விடாமல், பிடித்து கொண்டு இருந்தார்.

தகவலறிந்து தீயணைப்பு மீட்பு படையினர், அங்கு சென்று, நைசாக அவரை நெருங்கி, அவரிடம் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்பாஸை உடனே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சில நிமிடங்களிலேயே,உடல் முழுவதும் விஷம் பரவி இறந்தார்.

click me!