
மதுக்கடைகளை இழுத்து மூடியதால் வேலை இழந்த ஊழியர்கள் வேறு இடங்களில் பணி அமர்த்த வலியுறுத்தி மே 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 500 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி மதுபான கடைகள் மூடப்பட்டன.
அதே போல் தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியும் நெடுஞ்சாலைகளில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என தெரிவித்தார். அதேபோல் அந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.
இந்த டாஸ்மாக் கடைகளை வேறு கிராம புறங்களில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.
கிராம புறங்களில் வைக்கப்படும் மதுபான கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடைகளை சூறையாடி வருகின்றனர்.
இதனால் மதுக்கடைகளை மூடியதால் பல டாஸ்மாக் ஊழியர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.
பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உயர்நீதிமன்றமும் மதுபான கடைகளுக்கு எதிராக போராடுவோர் மீது போலீஸ் தாக்குதல் நடத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மதுக்கடைகளை இழுத்து மூடியதால் வேலை இழந்த ஊழியர்கள் வேறு இடங்களில் பணி அமர்த்த வலியுறுத்தி மே 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.