தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.467.69 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும், டாஸ்மாக்கில் மது விற்பனை மாநிலம் முழுவதும் ஜோராக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 11ம் தேதி மதுரை மண்டலத்தில் 52.73 கோடியும், 12ம் தேதி ரூ.51.97 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதே போன்று நவம்பர் 11ம் தேதி சென்னையில் ரூ.48.12 கோடி, கோவை ரூ.40.20 கோடி, திருச்சி 40.02 கோடி, சேலம் ரூ.39.78 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும் நவம்பர் 12ம் தேதி சென்னை ரூ.52.98 கோடி, கோவை ரூ.39.61 கோடி, திருச்சி 55.60 கோடி, சேலம் ரூ.39.61 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.