லாரியிலிருந்த டாஸ்மாக் பெட்டிகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் - 1.5 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் அபேஸ்

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 09:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
லாரியிலிருந்த  டாஸ்மாக் பெட்டிகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் - 1.5 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் அபேஸ்

சுருக்கம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து  தார் பாயை பிரித்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள  1728 மது பாட்டில்கள் திருட்டு போயுள்ளன.
கோயம்பத்தூரில் இருந்து நேற்று மாலை மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு வேலூர் மாவட்டம் காட்பாடி டாஸ்மாக் கடைகளில் வினியோகிக்க வந்த லாரியை ஓட்டுனர் தம்புராஜ் ஓட்டி  வந்துள்ளார்.

இன்று அதிகாலை வேலூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்த வெங்கிலி அருகே வரும் போது தூங்குவதற்கு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் உள்ள தார்பாயை பிரித்து மர்ம நபர்கள் லாரியில் இருந்து 36  அட்டை பெட்டிகளில் இருந்த தலா 180 மில்லி அளவுடைய  48 பாட்டில்கள் 1728 பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். 

இதன் சந்தை மதிப்பு ரூ 1.5 (ஒன்னறை) லட்சம்  என கூறப்படுகிறது. இது குறித்து  லாரி  ஓட்டுநர் தம்புராஜ் அளித்த புகாரின் பேரில்   ஆம்பூர் காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
ஊராட்சிகளில் கலப்பட பிளீச்சிங் பவுடர்... சிவகங்கை மாவட்டத்தில் அவலம்..!