உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு…

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 09:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு…

சுருக்கம்

இராமநாதபுரம்,

சிறுபாண்மையினர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது,

சிறுபான்மையின மாணவ – மாணவிகள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்க வருகிற 30–ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் ஆட்சியர் செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களிலும் பள்ளிப்படிப்பு படித்து வரும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சியம் மற்றும் ஜெயின் வகுப்பை சார்ந்த மாணவ – மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவியரின் பெற்றோர். பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும். பிளஸ்–1, பிளஸ்–2 படித்து வரும் மாணவ–மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

மாணவ – மாணவியர் முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் (1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் கல்வி உதவி தொகை பெற்றிருக்கக்கூடாது. ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதில் அனைவருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவியர் படித்து வரும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 30-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் மாணவ – மாணவியரிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து ஆன்லைன் மூலம் வருகிற 30–ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகுதி உள்ள மாணவ – மாணவியரின் விண்ணப்பங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

உரிய காலத்தில் சிறுபான்மையின மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!