சக்கரம் அப்டேட்: 3,4,5 தேதிகள் முக்கியம்: தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

By Manikanda Prabu  |  First Published Nov 29, 2023, 6:00 PM IST

தமிழகத்துக்கு முக்கியமான நாட்கள் என மழை குறித்து முக்கிய அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், இயல்பை விட இதுவரை  குறைவான அளவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அதிகளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

என்னுடைய கனவெல்லாம் இதுதான்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!

வங்க கடலில் புயல் சின்னம் வலிமை பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் முக்கியமான நாட்கள் என மழை குறித்து முக்கிய அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அதன்படி, “ஒண்ணு ரெண்டு மூணு (3) நாலு (4)  அஞ்சு (5)ஆறு எந்த ஊரு (North TN) நேரம் வந்தாச்சு மழை தந்தாச்சு கொஞ்ச நேரம் வெச்சு செய்யலாமா!! 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகள் வடதமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் முக்கியமான நாட்கள். நோட் பண்ணிக்கோங்க.” என சக்கரம் அப்டேட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

 

Update: ஒண்ணு ரெண்டு 🌀மூணு (3) நாள் (4) 🌀 அஞ்ச (5)🌀ஆறு எந்த ஊரு (North TN) நேரம் வந்தாச்சு மழை தந்தாச்சு கொஞ்ச நேரம் வெச்சு செய்யலாமா !!!!

3, 4 and 5 - Key dates for North TN including Chennai. Pa group Note pannunga !!!

— Tamil Nadu Weatherman (@praddy06)

 

சக்கரம் என புயலைக் குறிப்பிட்டு அவர் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார். முன்னதாக, அனைவரது கவனமும் உருவாகும் சக்கரத்தின் மீது தான் இருக்கிறது. இன்னும் 6 நாள்தான் சக்கரத்திற்கு இருக்கு. அதில் பல திருப்பங்கள் நடக்கக்கூடும். அது எங்கே கரையைக் கடந்தாலும் கூட ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகக் கூறலாம். அதாவது வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் நிச்சயம் நல்ல மழை பெய்யும்.” என பதிவிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

click me!