
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைய பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..
மேலும், நாளை உள் தமிழகத்திலும், தென் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்திள்ளது.