பேருந்தில் வாலிபர் சுட்டு கொலை – 'பழிக்கு பழி' வாங்க திட்டம் தீட்டிய 9 பேர் அதிரடி கைது

 
Published : Oct 14, 2016, 01:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
பேருந்தில் வாலிபர் சுட்டு கொலை – 'பழிக்கு பழி' வாங்க திட்டம் தீட்டிய 9 பேர் அதிரடி கைது

சுருக்கம்

விருதுநகர் அருகே சாத்தூரில் ஓடும் பேருந்தில் கருப்பசாமி என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் 9 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து சாத்தூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, கோவில்பட்டி வள்ளுவர் நகரைச்சேர்ந்த  கருப்புசாமி என்பவர் நேற்று துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், சாத்தூரில் அப்துல்லா என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே இந்த கொலை நடந்திருப்பதாகமுதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கருப்பசாமியின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 9 பேரை தனிப்படையினர் கைது செய்து  அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள அப்துல்லாவின் தந்தை ரஃபீக்கை பிடிக்க  தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக