பக்ரீத் தொடர் விடுமுறை! 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

By SG Balan  |  First Published Jun 27, 2023, 9:23 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை கூடுதலாக இயக்க உள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்து. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக மாநிலம் முழுவதும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரின் சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:

"சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை (28-6-2023) தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் லோனில்... ஜட்டி வரை உருவிட்டான்... பாதிக்கப்பட்ட இளைஞரின் புலம்பல் பாடல்!

click me!