ஓசூர் அருகே மகளின் காதலனை அடித்து கொன்ற வழக்கில் தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகிய 3 பேருக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கும்ளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லப்பா (வயது 66). இவரது மனைவி ஜெயம்மா (56) இவர்களது மகன் ஒசகோட்டப்பா (41) பில்லப்பாவின் 17 வயது மகளும் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேகலகவுண்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகன் தனியார் கம்பெனி ஊழியர் சேகர் (22) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் பில்லப்பாவுக்கு தெரிய வரவே அவர் தனது மகளையும் மகளின் காதலனான சேகரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரின் காதல் தொடர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பில்லப்பா தனது மகள் மூலம் போன் செய்து சேகரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். சேகர் பில்லப்பாவின் வீட்டுக்கு சென்றபோது பில்லப்பா அவரது மனைவி ஜெயம்மா மகன் ஒசகொட்டப்பா ஆகிய 3 பேரும் சேகரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சேகர் பலத்த காயமடைந்தார்.
புதுவையிலும் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக்க சட்டம்: முதல்வரிடம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை
இதுகுறித்து பில்லப்பா சேகரின் தந்தை ராஜப்பாவுக்கு தகவல் அளித்துள்ளார். ராஜப்பா மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பலத்த காயமடைந்த சேகரை மீட்டு பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சேகரை கொலை செய்ததாக பில்லப்பா, அவரது மனைவி ஜெயம்மா அவர்களது மகன் ஒசகொட்டப்பா ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: புதுவையில் பரபரப்பு
இந்த நிலையில் இன்று இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை சேகரை கொலை செய்த குற்றத்திற்காக பில்லப்பா, ஜெயம்மா ஒசகோட்டப்பா ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் இதனைபடுத்து அவர்கள் 3 பேரையும் காவல் துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.