கனிமவளக்கொள்ளையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஓசூர் மத்திகிரியில் பாஜக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார். இந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேலூர் இப்ராஹிம், தமிழகத்தில் எம்எல்ஏ முதல் அமைச்சர்கள் வரை ஊழல் செய்து வருகின்றனர். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து அவர் விசாரிக்கப்பட உள்ளார். விரைவில் பொன்முடி அவர்கள் கனிமவள கொள்ளையில் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துறையிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது இந்த ஊழலில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் எவ்வளவு கோடி ரூபாய் ஊழல் வாங்கப்பட்டுள்ளது என்பது குறித்து எங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். மொத்த அமைச்சர்கள் கூட்டுச்சதி மற்றும் கொள்ளையிலும் ஈடுபட்டு இருப்பதை திமுக பைல்ஸ் 2 வை அண்ணாமலை விரைவில் வெளியிட உள்ளார்.
இதன் மூலம் ஏராளமான அமைச்சர்களின் தலைகள் உருள போவதாக அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் மக்களுக்காக இல்லாமல் திமுக தலைவருக்கு கப்பம் கட்டுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வாரிசுகளை அரசின் பொறுப்புகளுக்கு கொண்டு வருவதற்கும் சொத்து சேர்க்கும் வங்கிகளாக உள்ளனர் என கூறினார்.
அதிகாலையிலேயே லண்டன் புறப்பட்டு சென்ற அண்ணாமலை.! என்ன காரணம் தெரியுமா.?