ஓசூர் அருகே சாலையில் கொட்டி சேதமடைந்த 12 டன் மாங்காய்கள்

By Velmurugan s  |  First Published May 26, 2023, 4:23 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மாங்காய்கள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி, முன்னே சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈச்சர் லாரியில் கொண்டு சென்ற மாங்காய்கள் டன் கணக்கில் சாலையில் கொட்டி வீணானது.


பெங்களூர் நகரில் இருந்து ஈச்சர் லாரி ஒன்றில் 12 டன் அளவில் மாங்காய்கள் ஏற்றப்பட்டு ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஈச்சர் லாரி ஓசூர் அருகே காந்திநகர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னே காப்பர் லோடு ஏற்றி சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

Tap to resize

Latest Videos

இந்த விபத்தில் ஈச்சர் லாரியின் இடது பக்கம் பலத்த சேதமடைந்து லாரியில் ஏற்றப்பட்டிருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டியது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதிக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஜேசிபி வாகனத்தை வரவழைத்து அதன் மூலம் சாலையில் கொட்டி கிடந்த மாங்காய்களை அப்புறப்படுத்தினர்.

திருச்சியில் இருந்து குமரிக்கு காதலியை தேடி சென்ற பெண் விரட்டியடிப்பு

இதில் வாகனங்களின் சக்கரங்கள் ஏறி சென்றதில் மாங்காய்கள் அதிக அளவில் சேதமானது அதேபோல சாலையில் சென்ற ஒரு சில பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி கீழே கொட்டி கிடந்த மாங்காய்களை அள்ளி சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தனக்காக பிறந்த நாள் கொண்டாடியவர்களுக்கு பாசத்துடன் நன்றி தெரிவித்த திருவானைக்காவல் யானை

click me!