கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் கணவனை இழந்து 6 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகள் அதே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகே வசித்து வரும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுனில்வர்மா(வயது 32) என்பவர் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுமி அழுதவாறு சுனில்வர்மா வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார். நீண்ட நேரமாக சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் சிறுமியிடம் அவரது தாய் கேட்டுள்ளார்.
அப்போது சிறுமிக்கு சுனில்வர்மா பாலியல் தொல்லை கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுனில்வர்மாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்தில் ஆம்புலன்ஸ் மோதி தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்; சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு வடமாநில இளைஞர் பாலியல் தொல்லை அளித்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.