ஓசூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, பெரியார் நகர் பகுதியில் டீக்கடையில் இருந்த வாலிபரை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் பட்டபகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து தலைமறைவாகினர். ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாத் தலைமையில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலக்(வளது 25) என்பது தெரியவந்தது.
சொப்பட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு ஸ்ரீ ராம் சேனா ஒசூர் நகர செயலாளராக இருந்த மோகன்பாபு(25) என்பவரை திலக் உள்ளிட்ட 6பேர் கத்தியால் குத்தி கொலை செய்திருந்தனர். இந்நிலையில் தான் இந்த கொலை சம்பவம் பழிக்கு பழி தீர்க்கும் விதமாக நடந்துள்ளது என்கின்றனர். திலக் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஓசூர் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர்; காப்பாற்ற யாரும் முன் வராததால் பலியான சோகம்
ஓசூரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட படுகொலைக்கு பழிக்கு பழியாக தற்போது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.