தனியார் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணுக்கு அதிப்படியான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதால் கரு கலைந்ததாகக் கூறி கருத்தரித்தல் மையத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜவகர்(வயது 28). இவர் சென்னை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த மீனா என்பவரை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டு தொட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்
இருவரும் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் ஒசூரில் உள்ள பிரபல தனியார் கருத்தரித்தல் மையத்தில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் முதல் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருமுட்டையும், ஜவகரிடம் பெறப்பட்ட விந்தனுக்கள் சரியான முறையில் இருப்பதாக ஐஸ்வர்யா நிர்வாகம் தெரிவித்ததால் கணவன், மனைவியும் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் அதிரடி கைது.. என்ன காரணம்?
இந்தநிலையில் மே மாதம் 26ம் தேதி மீனாவிற்கு கருமுட்டை செலுத்தி இரு சிசுக்களும் வளர தொடங்கியிருப்பதாக கூறியதாகவும் 100% குழந்தை உருவாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து ஜவகர், இந்த மாத தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். B.Sc நர்சிங் படித்துள்ள மீனாவிற்கு அதிகப்படியான டோஸ் கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் இதனை மீனா கேட்டதற்கு எங்களுக்கு தெரியும் என அலட்சியத்துடன் பதிலளித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
7 வாரங்கள் கரு வளர்ந்த நிலையில், தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதித்தபோது இரட்டை குழந்தைகளுக்கும் இதயம் உருவாகி சரியான முறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தான் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மீனாவிற்கு வீட்டில் இரத்தப்போக்கு அதிகரித்ததால் மருத்துவரை தொடர்பு கொண்டபோது இரவில் மருத்துவர்கள் யாரும் இல்லை நீங்கள் வெளியில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்றதாகவும், கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் மற்ற தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயங்கி வெளியே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் வாலிபர் வெட்டி படுகொலை; புதுவையில் பதற்றம்
சரியான வழிகாட்டுதலோ, முறையான சிகிச்சையோ வழங்காததால் அன்று இரவே கருத்தரித்தல் மையத்தினர் தெரிவித்த ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகள் அபாசன் ஆனதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண் மீனா கூறுகையில், குழந்தை 100% உண்டாகும் என்பதால் மகிழ்ச்சியோடு கணவன் வெளிநாடு சென்றதாகவும் குழந்தைகள் இல்லை என்பதை அவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் தற்போது குழந்தைகளோ, கணவனோ உடன் இல்லாமல் வேதனை அனுபவிக்கிறேன்.
ஒரு செவிலியரான எனக்கே இந்தநிலை என்றால் படிக்காத ஏழை மக்களின் நிலை என்ன? ஒசூரில் உள்ள கருத்தரித்தல் மையத்தில் போதிய வசதிகளும், சிறந்த மருத்துவர்களும் இல்லை என்பதால் கருத்தரித்தல் மையத்தை இழுத்து மூட வேண்டும். நான் உயிரோடு வாழ விரும்பாததால் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கருத்தரித்தல் மையம் தான், என் சாவுக்கு காரணமாக இருக்கும் என கூறி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கருமுட்டைகளை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது குறிப்பிடதக்கது.