ASER: தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் கொரோனா பரவலுக்குப்பின் மிக மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி

By Pothy RajFirst Published Jan 21, 2023, 4:30 PM IST
Highlights

கொரோனா பரவலின் போது லாக்டவுனில் நீண்டகாலம் பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடந்ததால், மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன், கணிதத்திறன் மிகவும் மோசமாகியுள்ளது என்று ஆண்டு கல்வி அறிக்கை(ASER) 2022ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் போது லாக்டவுனில் நீண்டகாலம் பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடந்ததால், மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன், கணிதத்திறன் மிகவும் மோசமாகியுள்ளது என்று ஆண்டு கல்வி அறிக்கை(ASER) 2022ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பிரதானமாகக் குறிப்பிடுவது என்னவெனில், மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் கணிதத்திறன் மிகவும் மோசமாக பின்பதங்கியுள்ளது என்பது வருத்தத்குரியதாகும்.

2018ம் ஆண்டுக்குப்பின், 2022ம்ஆண்டில்தான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 31 மாவட்டங்களில் உள்ள 920 கிராமங்களில் 30,377 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் 2 மர்மபொருட்கள் வெடித்ததில் 6 பேர் காயம்: ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா நடக்குமா?

2018ம் ஆண்டு ஆய்வின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 3ம் வகுப்பு மாணவர்களில் 10.2 சதவீதம் பேர் மட்டுமே 2-ம்வகுப்பு பாடங்களை படிக்கும் திறன் உள்ளவர்களாக இருந்தனர். இது 2022ம் ஆண்டில் மேலும் மோசமாகி,4.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 

இதில் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், மாணவர்களில் படிக்கும் திறன் மோசமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருப்பதுதான். 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இது 27.3 சதவீதமாக இருந்தநிலையில் 2022ல் 20.5 சதவீதமாக படிக்கும் திறன் குறைந்துவிட்டது. 

கொசுறு! 30 லட்சம் காலியாக இருக்கு! 71,000 பேருக்குத்தான் வேலையா: காங்கிரஸ் விளாசல்

அடிப்படை வாசிப்புத் திறன்

2ம்வகுப்பு பாடங்களை படிக்க திறன் உடைய 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்புத்திறன் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குறைந்துள்ளது.
கணிதத்திறனைப் பொறுத்தவரை, 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 11.2 சதவீதம் பேர் மட்டுமே கழித்தல் கணக்கை செய்ய முடிகிறது, 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 14.9 சதவீதம் பேர் மட்டுமே வகுத்தல் கணக்குகளை செய்ய முடிகிறது

தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது. 2006ம் ஆண்டில் 78.3 சதவீதமாக இருந்தது, 2018ல் 67 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் அங்கன்வாடிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையும் 90 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கிறது

6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் பயில்வது கடந்த 2018ல் 67.4% இருந்தது, 2022ல் 75.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அங்கன்வாடிகளில் 2018ல் 61.1 சதவீதமாக இருந்தது, 2022ல் 78.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது... உறுதி அளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!!

தமிழகத்தில் 8ம்வகுப்பு பயிலும் மாணவர்கள் 2ம்வகுப் பாடப்புத்தகங்களை படிக்கக் கூடிய திறன் உள்ளவர்கள் கடந்த 2018ல் 73 சதவீதமாக இருந்தனர். இது 2022ம் ஆண்டில் 62.9 சதவீதமாகக் குறைந்துள்ளனர்.

3ம்வகுப்பு பயிலும் மாணவர்களில் சாதாரண கழித்தல் கணக்கை தெரிந்துள்ளவர்கள் 2018ல்25.2 சதவீதமாக இருந்தனர், இது 2022ல் 11.2 சதவீதமாகச் சரிந்துவிட்டனர். வகுத்தல் கணக்கை தெரிந்தவர்களில் 2018ல் 5ம்வகுப்பு மாணவர்களில் 25.6 சதவீதம் பேர் இருந்தநிலையில், இது 2022ல் 14.9 சதவீதமாகக் குறைந்துவிட்டனர். 

8ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் வகுத்தல் கணக்கு செய்யத் தெரிந்தவர்கள் கடந்த 2018ல் 50 சதவீதம் இருந்தநிலையில், 2022ல் 44.3 சதவீதமாகக் குறைந்துவிட்டனர்.  தேசிய அளவில் 44.1 சதவீதத்தில் இருந்து 44.7 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
 

click me!