30% சம்பள உயர்வு கேட்டு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

Published : Aug 29, 2018, 01:17 PM ISTUpdated : Sep 09, 2018, 08:21 PM IST
30% சம்பள உயர்வு கேட்டு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

கிராம ஊழியர்கள் அனைவருக்கும் 30% சம்பள உயர்த்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   

கிருஷ்ணகிரி

கிராம ஊழியர்கள் அனைவருக்கும் 30% சம்பள உயர்த்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் இவர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் வட்டத் தலைவர் நேரு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேகர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை கிராம உதவியாளர்களுக்கு வழங்கணும்; 

'பொங்கல் போனஸ்' நாள் கணக்கில் வழங்கணும்; 

இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்புப் படி வழங்கணும்; 

ஓய்வுறும் நாளில் பெறும் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்க வேண்டும்; 

வி.ஏ.ஓ-வுக்கு பதவி உயர்வு வழங்கணும்;

அனைவருக்கும் 30% சம்பள உயர்த்த வேண்டும்;

பதவி உயர்வுக்கு பத்து ஆண்டுகள் என்பதை ஆறு ஆண்டுகளாக குறைக்க வேண்டும்" உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். வட்டப் பொருளாளர் முனிராஜ் நன்றித் தெரிவித்து முடித்து வைத்தார். 

PREV
click me!

Recommended Stories

35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்