கிருஷ்ணகிரியில் தன்னை கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி தாய், தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களுடன் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரியில் தன்னை கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி தாய், தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களுடன் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு உண்டானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், முத்தாலியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆனந்த். இவரது மகள் தீபா (22). பி.கா. படித்துள்ளார். ஓசூர், அலசந்தம் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் சீனப்பா. இவரது மகன் நவின் (33). இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார்.
நவீனுக்கும், தீபாவுக்கும் போன வருடம் மார்ச் மாதம் 15-ஆம் தேதி திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த தீபாவை போன நவம்பர் மாதம் அவரது மாமனார் மற்றும் மாமியார் முறைப்படி தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு தீபாவிற்கு ஏழு மாதத்தில் குறைப் பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது. அவருக்குப் பிறந்தக் குழந்தையும் ஒரு மாதத்திற்குள் இறந்துவிட்டது. இந்த தகவல் அனைத்தும் கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்குத் தெரியும்.
பல மாதங்கள் கடந்தும் தாய் வீட்டில் இருக்கும் தீபாவை அழைத்துச் செல்ல கணவர் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இந்த நிலையில் தனது கணவனைச் சந்திக்க பெங்களூர் சென்ற தீபா கணவனை காணாமல் ஊர் திரும்பினார்.
தன்னை கைவிட்டு விட்டாரோ? என்று அச்சத்தோடு ஊருக்கு வந்த தீபா ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்தார். இதுகுறித்து விசாரித்த காவலாளார்களிடம், தான் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக நவீன் கூறினார்.
ஆனால், அவரது மாமனார் மற்றும் மாமியார் தீபாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நேற்று காலை தனது தந்தை, தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்குச் சென்றார் தீபா. இவர்களை யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் தீபாவின் மாமனார், மாமியார் கதவைப் பூட்டினர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார் தீபா. பின்னர், அலசநத்தம் சாலையில் அமர்ந்து உறவினர்களுடன் போராத்தில் ஈடுபட்டார். சமபவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காலாளர்கள், தீபாவிடம் பேசினர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தாய், தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களுடன் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டதால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.